இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பாலமுருகனுக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2024 06:03
கோவை; கோவை நேரு ஸ்டேடியம் ஆடிஸ் வீதி இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பங்குனி தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள பாலமுருகனுக்கு அபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.