பரமக்குடி; பரமக்குடி சின்ன கடை தெரு துர்க்கை அம்மன் கோயில் பகுதியில் இருந்து பாகம்பிரியாள் கோயிலுக்கு 41வது ஆண்டாக பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொண்டனர். பரமக்குடி பாகம்பிரியாள் பாதயாத்திரை குழு சார்பில், நேற்று மாலை 6:00 மணிக்கு சின்ன கடை துர்க்கை அம்மன், மதுரை வீரன், காமாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து இரவு பாதயாத்திரை புறப்பட்டு சென்றனர். இன்று காரடர்ந்தகுடி அரியான்கோட்டை, ஆர்.எஸ்., மங்களம் வழியாக, ஏப்., 5 காலை பாகம்பிரியாள் கோயிலை அடைகின்றனர். மேலும் அன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு திரும்பி வர உள்ளனர்.