தேய்பிறை அஷ்டமி; சிவபுரிபட்டியில் வடுகபைரவருக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஏப் 2024 04:04
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்கு உட்பட்ட தர்மஷம்வர்த்தினி, சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி வடுக பைரவர் பூஜை நடந்தது. யாகம் நடத்தப்பட்டு பைரவருக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். கோயில் சூப்பிரண்டு ஜெய்கணேஷ் முன்னிலையில் ரவி சிவாச்சாரியார் பூஜைகளை நடத்திவைத்தார்.
பிரான்மலை மங்கைபாகர் கோயிலில் உள்ள வடுக பைரவருக்கு உமாபதி சிவாச்சாரியார் தேய்பிறை அஷ்டமி பூஜையை நடத்தி வைத்தார். மணப்பட்டியில் உள்ள நாய்க்குட்டியான் கோயிலில் பைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.