சிவசுப்ரமணியர் கோவிலுக்கு ரூ.76 ஆயிரம் வாடகை பாக்கி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31அக் 2012 11:10
குன்னூர் : குன்னூர் சிவசுப்ரமணியர் கோவிலுக்கு 76 ஆயிரத்து 739 ரூபாய் வாடகை பாக்கி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூரில் தந்தி மாரியம்மன் கோவில், அருள்மிகு விநாயகர் கோவில் மற்றும் அருள்மிகு சிவசுப்ரமணியர் கோவில்கள் இந்து அறநிலை துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் அதிகபட்சமாக விநாயர் கோவிலில் தான் நீலகிரி மாவட்டத்திலேயே அதிகளவு வாடகை பாக்கி உள்ளது. இந்தாண்டு செப்டம்பர் மாதம் வரை இந்த கோவிலுக்கு, 21 கடை உரிமையாளர்கள் 11 லட்சத்து 38 ஆயிரத்து 872 ரூபாய் பாக்கி வைத்துள்ளனர். வி.பி. தெருவில் உள்ள சிவசுப்ரமணியர் கோவிலுக்கு ஒரு வீடு உட்பட 24 குடோன்கள் உள்ளன. இதில் 2 பேரை தவிர அனைவரும் தங்கள் வாடகை பாக்கி முறையாக கட்டி வருகின்றனர். இதில், சுவாமியப்பன் என்பனர் 26 ஆயிரத்து 101 ரூபாய்; இமாம் என்பவர் 50 ஆயிரத்து 638 ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளனர். சுதர்சனம் என்பவரிடமிருந்து, ஒரு கடையை இமாம் என்பவர் பெற்றுள்ளார். குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலுக்கு சொத்துக்கள் ஏதும் இல்லை.