ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொத்திடல் களக்குடி, வெள்ளம்புலி தர்ம முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக அனுக்ஞை, விக்னேஸ்வரர், கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், பூர்ணாகுதி தீப ஆராதனையும் நடைபெற்று, கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து யாக சாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோவில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் முனீஸ்வரருக்கு புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை குலதெய்வ வழிபாட்டாளர்கள் மற்றும் நாடார் உறவின்முறை நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.