சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி கோவிலில் பறை எடுக்கும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2024 10:04
கோவை; கோவை, சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி கோவில் 55வது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழா இரண்டாம் நாளில் கோவில் கொடிமரம் முன்பு பறை எடுக்கும் நிகழ்வு நடந்தது. இதில் யானை மேல் சுவாமி ஐயப்பனின் திரு உருவப்படம் வைக்கப்பட்டு அதன் முன்பு பொதுமக்கள் நெல் மற்றும் தானிய வகைகளை வைத்து வழிபட்டனர். இந்த நிகழ்வில் கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது சுவாமி ஐயப்பனின் திரு உருவ படத்தின் முன்பு பொதுமக்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர்.