காளியம்மன் கோவில் உற்சவ விழா; சுவாமிக்கு அபிஷேக ஆராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2024 10:04
கோவை; சாய்பாபா காலனி கே. கே .புதூர் தெரு எண் - 9ல் உள்ள காளியம்மன் கோவில் வீதியில் இருக்கும் காளியம்மன் கோவிலில் கடந்த 26ம் தேதி 63ம் ஆண்டு உற்சவ விழா துவங்கி நடந்து வருகிறது. அதன் நிறைவு நாள் நிகழ்வாக சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் மூலவர் அம்மன் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.