அமாவாசை, அமாசோமவாரம்; அரச மரத்தை வலம் வந்து வழிபட அனைத்தும் நிறைவேறும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2024 07:04
பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் உள்ளது. அமாவாசை என்பது பகல் ஆரம்பிப்பதற்கு முன்புள்ள விடியற்காலம் போன்றது. காலைப்பொழுது பூஜைக்குச் சிறந்தது என்பதால், முன்னோர் வழிபாட்டுக்கு அமாவாசையைத் தேர்ந்தெடுத்தனர். இந்நாளில் புரோகிதர் மூலமாக தர்ப்பணம் செய்வது சிறப்பு. இன்று மனதார பித்ருக்களை வழிபட்டு அவருக்கு கொடுக்க வேண்டிய அரிசி, காய்கறி, பழம், தட்சிணை, வஸ்திரம் முதலானவற்றை வேறு யாருக்கேனும் தானம் செய்யலாம். ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். பசுக்களுக்கு பழம், அகத்திக்கீரை கொடுப்பது இன்னும் நல்ல பலன் தரும்.
திங்களும், அமாவாசையும் இணையும் நாள் அமாசோமவாரம். இந்நாளில் அதிகாலையில் நீராடி, கோயிலில் உள்ள அரச மரத்தை 11 முறை சுற்றி வருவர். இதற்கு அமாசோம பிரதட்சணம் என்று பெயர். நோய் மறையும். எண்ணியது நிறைவேறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அன்றையதினம் விடியற்காலையில் அரசமரத்தை மூன்றுமுறை வலம் வந்து வணங்கினால் நோய்நொடி இல்லாமல் வாழலாம். இன்று வீட்டில் குலதெய்வத்தை வழிபட எல்லா நன்மையும் நடக்கும்.