கார்த்திகை, சவுபாக்கிய கவுரி விரதம்; சிவசக்தி வழிபாடு சிறப்பை தரும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2024 10:04
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. குறிஞ்சிக்கடவுளாகக் குமரன் முருகனே மலைகளின் மீது ஆட்சி செய்கிறார். தெய்வங்களின் உயர்ந்தவராகத் திகழ்வதால் அவரைத் தெய்வசிகாமணி என்று போற்றுவர். கந்தனைக் கரம் குவித்து வணங்குவோருக்கு கலியின் கொடுமையும், காலபயமும் கிடையாது என்று வடமொழி ஸ்காந்தம் குறிப்பிடுகிறது. முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் முக்கியமானது கார்த்திகை விரதம். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர் கந்த பெருமான். கார்த்திகையில் கந்தனை வழிபட துன்பம், கடன் தொல்லை நீங்கும். முருகன் கோயில்களில் விளக்கேற்றி வழிபட வேண்டும். அரோகரா சொல்லி ஆறுமுகனை வழிபட அனைத்தும் கிடைக்கும். கார்த்திகை நன்னாளில் முருகப்பெருமானை வணங்கி நற்பலன்கள் பெறுவோம்.
பங்குனி மாத வளர்பிறை திருதியை சவுபாக்கிய கவுரி விரதம் என்று அழைப்பார்கள். இன்று (11ம்தேதி) இந்த சிறப்பான தினம் வருகிறது. அம்பாளை கொண்டாடுகின்ற இந்த விரதத்தை மிக எளிமையான பூஜையின் மூலம் கொண்டாடலாம். சிலர் ஒரு மாத காலம் கொண்டாடுவார்கள். இந்த விரதத்தால், வீட்டில் தடைப்பட்ட சுப நிகழ்ச்சிகள் எல்லாம் தடை நீங்கி நடக்கும். வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள் பெருமாள் கோவிலில் தாயாருக்கும், சிவாலயத்தில் அம்பாளுக்கும் விளக்கு போட்டு அர்ச்சனை செய்து வரலாம். சவுபாக்கிய கவுரி விரதம் சவுபாக்கியம் எனப்படும் அனைத்து (பதினாறு) வகை பேறுகளையும் பெற்றுத் தரும்.