மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2024 10:04
மதுரை; மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தரிசனம் செய்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜநாத் சிங் 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் நிலையில் இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகம் சார்பில் அமைச்சருக்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. கோவில் பொற்றாமரைக் குளத்தில் புகைபடம் எடுத்த அமைச்சர் ராஜ்நாத் சிங், பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்றார். இதற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.