காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று 9ம் தேதி ஸ்ரீ க்ரோதி நாம வருட உகாதியை முன்னிட்டு கோயிலை பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும் தெலுங்கு புத்தாண்டு உகாதியை யொட்டி கோயிலில் காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு உகாதி பச்சடி விநியோகிக்கப்படுகின்றன. தொடர்ந்து காலை 9.00 மணிக்கு ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரருக்கும் ஞானப் பிரசுனாம்பிகை தாயார் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் கோயில் அருகில் தேர் வீதியில் உள்ள பக்த கண்ணப்பருக்கு சிவன் கோயில் சார்பில் (சீர்வரிசை)பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது. மாலை 4.00 மணி முதல் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் மூலவர் சன்னதி அருகில் தேவஸ்தான ஆஸ்தான சித்தாந்தியால் பஞ்சாங்க சிரவணம் நடக்கிறது. மாலை 7.00 மணிக்கு கவி சம்மேளனம் நடத்தப்படும். தொடர்ந்து இரவு 9.00 மணிக்கு நான்கு மாட வீதிகளில் ஸ்ரீ சுவாமி அம்மையார்களின் ( உற்சவமூர்த்திகளின் ) ஊர்வலம் நடைபெறவுள்ளது என்று கோயில் நிர்வாக அலுவலர் நாகேஸ்வர ராவ் தெரிவித்தார்.