மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்; முன்பதிவு துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2024 11:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத்திருவிழா ஏப்.,12 ல் கொடியேற்றுத்துடன் துவங்கி ஏப்.,23 வரை நடக்கிறது. முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் ஏப்.21 காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் நடக்கிறது. இதற்கான முன்பதிவு துவங்கியது.
இதை காண ரூ.500 கட்டண ரசீது பெறுபவர்கள் காலை 5:00 மணி முதல் 7:00 மணிக்குள் வடக்கு கோபுரம் வழியாகவும், ரூ.200 கட்டண ரசீது பெற்றவர்கள் வடக்கு - கிழக்கு சித்திரை வீதி அருகே அமைக்கப்பட்டுள்ள பாதை வழியாக வடக்கு கோபுரம் வழியாக கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். முதலில் வருவோருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் கட்டணமில்லாமல் தரிசிக்க வருபவர்கள்தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர். அறநிலையத்துறையின் இணையதளமான hrce.tn.gov.in மற்றும் கோயில் இணையதளம் maduraimeenakshi.hrce.tn.gov.inல் இன்று ஏப்.,9 முதல் 13 வரை முன்பதிவு செய்யலாம்.
திருக்கல்யாணத்திற்கான மொய் ரூ.50, ரூ.100ஐ ஏப்.,21ல் இந்த இணையதளங்கள் மூலம் செலுத்தலாம். ஒருவர் இரண்டு ரூ.500 கட்டண ரசீதை மட்டுமே பெற முடியும். ரூ.200 கட்டண ரசீதை 3 பெறலாம். ஒரே நபர் ரூ.500, ரூ.200 கட்டண ரசீதை பெற முடியாது. பிறந்த தேதி சரியாக இருக்க வேண்டும். ஒரு பதிவுக்கு ஒரு அலைபேசி எண் மட்டுமே பயன்படுத்த முடியும்.