காரமடை அரங்கநாதர் கோவிலில் யுகாதி வழிபாடு; மூலவருக்கு திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2024 03:04
காரமடை: யுகாதி பண்டிகை முன்னிட்டு காரமடை ரங்கநாதர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
வைணவ திருத்தலங்களில் காரமடை ரங்கநாதர் திருக்கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு யுகாதி பண்டிகை முன்னிட்டு இன்று காலையில் மூலவர் ரங்கநாதருக்கு நெய், பால், தயிர், இளநீர், மஞ்சள், பன்னீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. அப்போது அச்சகர்கள் பஞ்ச சுக்தம் வேத கோஷம், திவ்ய பிரபந்த நீராட்டு பாசுரங்கள் சேவித்தனர். அதனைத் தொடர்ந்து கால சந்தி பூஜை, உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதருக்கு சிறப்பு ஆராதனம் சாற்று முறை சேவிக்கப்பட்டது. தொடர்ந்து திருவீதி புறப்பாடு நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.