காஞ்சி சங்கரமடத்தில் வசந்த நவராத்திரி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2024 04:04
திருநெல்வேலி; நெல்லை டவுன் காஞ்சி சங்கரமடத்தில் வசந்த நவராத்திரி விழா நேற்று துவங்கியது. நெல்லை டவுன் காஞ்சி சங்கர மடத்தில் வசந்த நவராத்திரியை முன்னிட்டு காமாட்சி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, புஷ்பாஞ்சலி நடந்தது. தொடர்ந்து சுவாசினி பூஜை, அஷ்டோத்திர அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை காஞ்சி சங்கரமடம் மேலாளர் நாராயணன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.