சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு; நாளை முதல் நெய்யபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2024 05:04
சபரிமலை: சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று (10ம் தேதி) மாலை திறக்கப்பட்டது. 14ம் தேதி விஷூ கனி தரிசனம் நடக்கிறது.
சித்திரை மாத பூஜைகள் மற்றும் விஷூ சிறப்பு பூஜைகளுக்காக இன்று மாலை ஐந்து மணிக்கு மேல்சாந்தி நடை திறந்தார். வேறு எந்த பூஜைகளும் கிடையாது. இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை 11ம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனம், அபிஷேகத்துக்கு பின் நெய்யபிஷேகத்தை தந்திரி தொடங்கி வைப்பார். தொடர்ந்து கணபதிஹோமம், உஷபூஜை, உச்சபூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், படிபூஜை, உதயாஸ்தமனபூஜை போன்ற பூஜைகள் நடைபெறும்.14அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் விஷூ கனி தரிசனம் நடைபெறும். கனிகளும், காய்களும் ஐயப்பன் விக்ரகம் முன் குவித்து வைக்கப்பட்டிருக்கும். தொடர்ந்து பக்தர்களுக்கு தந்திரியும், மேல்சாந்தியும் நாணயங்களை கை நீட்டமாக வழங்குவர். பின் வழக்கமான பூஜைகள் நடைபெறும். 18ம் தேதி இரவு பத்து மணிக்கு நடை அடைக்கப்படும். மண்டல -மகரவிளக்கு காலத்துக்கு அடுத்த படியாக பக்தர்கள் அதிகமாக வரும் சீசன் என்பதால் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.