Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொல்லங்கோடு காளி துாக்க திருவிழா ... திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா துவக்கம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2024
11:04

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று பங்குனி மாத கிருத்திகை ஒட்டி அதிகாலை, 5:30 மணி முதலே மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் பொது வழியில் மூலவரை தரிசிக்க, மூன்று மணி நேரம் தேர்வீதியில் நீண்ட வரிசையில் கடும் வெயிலிலும் காத்திருந்து மூலவர் முருகப் பெருமானை தரிசித்தனர். அதே போல், 100 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களும் இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கிருத்திகை விழா ஒட்டி, அதிகாலை, 4:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 9:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு காவடி மண்டபத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. அதிகளவில் மலைக்கோவிலுக்கு வாகனங்கள் வந்ததால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வேலுார் மாவட்டம், வள்ளிமலையில் நேற்று சிறப்பு உற்சவம் நடந்தது. ஊர்க்கோவிலில் காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மலைக்கோவிலில் காலை 9:00 மணி முதல் சிறப்பு தரிசனம் நடந்தது. வள்ளிமலை, பொன்னை, சோளிங்கர், மேல்பாடி, கோட்டநத்தம், விடியங்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள், மலைக்கோவிலுக்கு வந்திருந்தனர். வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல், அத்திமாஞ்சேரிபேட்டை நெல்லிக்குன்றம், நெடியம் கஜகிரி செங்கல்வராய சுவாமி மலைக்கோவிலில் நேற்று கிருத்திகை உற்சவம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அத்திமாஞ்சேரிபேட்டை நெல்லிக்குன்றம் மலைக்கோவிலில், மாலை 6:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் உள் புறப்பாடு எழுந்தருளினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வேலுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar