Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் 3 மணி ... காஞ்சி சங்கர மடத்தில் தமிழ் வருட பஞ்சாங்கம் வெளியீட்டு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசி காஞ்சி சங்கர மடத்தில் தமிழ் வருட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா துவக்கம்

பதிவு செய்த நாள்

12 ஏப்
2024
12:04

திருவட்டார்; திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா இன்று (12ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது.

குமரி மாவட்டத்தில், பிரசித்திபெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி, ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டைய பங்குனி திருவிழா இன்று (12ம் தேதி) துவங்கியது. விழாவை ஒட்டி 8.45ல் இருந்து 9.30 குள் கருட இலச்சினை பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக காலை 5 மணிக்கு ஹரிநாம கீர்த்தனம் மணிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு தீபாராதனை, இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் ஆகியன நடக்கிறது. 2ம் நாள் நாளை காலை 8 மணிக்கு நாராயண பாராயணம், இரவு 7 மணிக்கு டான்ஸ், 9 மணிக்கு சுவாமி அனந்த வாகனத்தில் பவனி வருதல், 10 மணிக்கு சந்தான கோபாலம், கதகளி, 3ம் நாள் காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், இரவு 7.45க்கு நடனம், 9 மணிக்கு கமல வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், 10 மணிக்கு ருக்மணி சுயம்வரம் கதகளி ஆகியன நடக்கிறது. நான்காம் நாள் காலை 8 மணிக்கு பாகவத பாராய ணம், இரவு 7 மணிக்கு சங் கீத கச்சேரி, 9.30க்கு சுவாமி பல்லக்கில் பவனி வருதல், 10 மணிக்கு பாலி விஜயம் கதகளி, 5ம் நாள் இரவு 7 மணிக்கு திருவாதிரைக் களி, 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் திருக்கொடியேற்று, கருட வாகனத்தில் சுவாமி பவனி வருதல் 10 மணிக்கு கதகளி நடக்கிறது. ஆறாம் நாள் இரவு 7 மணிக்கு ராமாயண பாராயணம், 7.15க்கு சங்கீத கச்சேரி, 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், கதகளி, 7ம் நாள் காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், பகல் 11 மணிக்கு சிறப்பு உற்சவ பலி தரிசனம், இரவு 7 மணிக்கு ராமாயண பாராயணம், 7.15க்கு சமய சொற்பொழிவு, 8 மணிக்கு சமய சொற்பொழிவு, 8 மணிக்கு நாட்டியாஞ்சலி , 9 மணிக்கு சுவாமி பல்லக்கு வாகனத்தில் பவனி வருதல், கதகளி ஆகியன நடக்கிறது. எட்டாம் நாள் இரவு 7 மணிக்கு டான்ஸ், மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், 10.30 மணிக்கு சிறப்பு நடிகர்கள் பங்கேற்கும் துரியோதன வதம் கதகளி, 9ம் நாள் இரவு 8.30க்கு சிறப்பு நாதஸ்வர கச்சேரி, 9.30க்கு சுவாமி கருட வாகனத்தில் பள்ளி வேட்டைக்கு எழுந்தருளல், நள்ளிரவு 12 மணிக்கு கிராதம் கதகளி நடக்கிறது. விழா நிறைவு நாள் 21ம் தேதி பகல் 11 மணிக்கு திருவிளக்கு எழுந்தருளல், மாலை 5.30க்கு கருட வாகனத்தில் சுவாமி ஆறாட்டுக்கு எழுந்தருளல், மூவாற்றுமுகம் ஆற்றில் ஆறாட்டு, 1 மணிக்கு குசேலவிருத்தம் கதகளி ஆகியன நடக்கிறது.  விழா ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar