தமிழ் புத்தாண்டில் விஷு கனி தரிசனம் செய்வது எப்படி?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2024 03:04
தமிழ் புத்தாண்டின் முதல் நாள் அதிகாலை விஷு கனி தரிசித்தால் ஆண்டு முழுவதும் ஆனந்தமாக அமையும். பங்குனி கடைசி நாள் இரவு சுவாமி படங்களுக்கு பூச்சூட்டி அலங்கரிக்க வேண்டும். குருவாயூரப்பன் படம் இருப்பது சிறப்பு. ஒரு மேஜையில் முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து இருபுறமும் குத்துவிளக்கு வைப்பார்கள். ஒரு தாம்பாளத்தில் பூ, பழம், வெற்றிலை பாக்கு, கிண்ணங்களில் அரிசி, பருப்பு, நகைகள் வைப்பர். இன்னொரு தாம்பாளத்தில் பழ வகைகள், வெள்ளரி, கொன்றைப்பூ, தென்னம்பூ வைக்க வேண்டும். மறுநாள் அதிகாலை வீட்டின் மூத்தவர் எழுந்து மேஜையில் உள்ள பொருட்களை பார்த்தபிறகு நீராடி குத்துவிளக்கை ஏற்ற வேண்டும். பின் வீட்டில் உள்ளவர்களை வயதுப்படி ஒவ்வொருவராக கண் மூடி வரச் செய்து, மேஜை முன் கண் திறந்து காணச் செய்ய வேண்டும். இதையே விஷு கனி தரிசனம் என்பர். எல்லாரும் நீராடிய பின் புத்தாடையும், காசும் கொடுக்க வேண்டும். இதற்கு கை நீட்டம் என்று பெயர். அன்று மதிய உணவில் வெல்லம், மாங்காய் சேர்த்த வேப்பம்பூ பச்சடி இருக்க வேண்டும். சகல வகை பாயாசமும் செய்யலாம். டிவி பார்ப்பதைத் தவிர்த்து குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வர வேண்டும்.