பாலமேடு; பாலமேடு அருகே அய்யூர் செல்வவிநாயகர், கரந்தமலை, செல்லாயி அம்மன், மண்டு கருப்பண சாமி, அய்யனார், சப்த கன்னிமார்கள் கோயில் உற்ஸவ விழா 3 நாட்கள் நடந்தது. முதல் நாள் பொங்கல் வைத்து அய்யனார் சுவாமி கண் திறப்பு விழா சிறப்பு வழிபாடுகள் நடந்தன. 2ம் நாள் கிடாவெட்டி செல்லாயி அம்மன் கோயிலில் பொங்கல் வைத்தனர். சுவாமி புரவி எடுத்து வந்து கிராம சாவடியில் வைத்து வழிபாடுகள் நடந்தன. அய்யனார் குதிரை எடுத்து வான வேடிக்கை, மேல தாளத்துடன் ஊர்வலமாக சென்று பூஞ்சோலை சென்றடைந்தனர். ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.