பதிவு செய்த நாள்
01
நவ
2012
10:11
கீழக்கரை: பெரியபட்டினம் மகான் செய்யதலி ஒலியுல்லா தர்கா, 111ம் ஆண்டின் சந்தனக்கூடு விழா செப்., 23ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. நவ.,2ல் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு விழா நடக்கிறது. மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில், அனைத்து சமூக மக்கள் இணைந்து சந்தனக்கூடு சுமந்து தர்காவிற்கு கொண்டு வந்து அங்கு சிறப்பு பிரார்த்தனை செலுத்துவர். நேற்று இரவு முதல் வெளியூர் பக்தர்கள் வரத் துவங்கியுள்ளனர்.பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்கவும், குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும் ஊராட்சி தலைவர் எம்.எஸ்.கபீர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அக்.,12ல் கொடியிறக்கம் நடக்கிறது.ஏற்பாடுகளை, கமிட்டி தலைவர் செய்யது இபுறாம்சா, கமிட்டி செயலாளர் ரமலான், விழா ஒருங்கிணைப்பாளர் அப்துல் மஜீது, ஒன்றிய கவுன்சிலர் அபிபுல்லா மற்றும் சுல்த்தானிய சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.