பதிவு செய்த நாள்
18
ஏப்
2024
11:04
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ரயில்வே பீடர் ரோடு வீர ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் ஏப். 11ல் துவங்கிய ராம நவமி விழாவில் தினம் சிறப்பு அபிஷேகம், பூஜை, ஆன்மிக சொற்பொழிவுகள், பரத நாட்டியம், நாதஸ்வரம், தவில் இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை சாதுக்கள், சான்றோர்கள், பக்தர்கள் பங்கேற்ற ஸ்ரீ ராம நாம ஜெபம் நடந்தது. மஹா சுதர்சன ஹோமம் முடிந்து மூலவர் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் சாத்துப்படியானது. வெள்ளி கவச அலங்காரத்தில் உற்சவர்கள் சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயருடன் ராமர் அருள்பாலித்தார். கூடல்மலைத்தெரு சூட்டுக்கோல் ராமலிங்க விலாசத்தில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள 12 அடி உயர ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், பூஜை முடிந்து, வடைமாலை சாத்துப்படியாக தீபாராதனை நடந்தது.