Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்ரா பௌர்ணமி விழா; சித்தர் ... குளிர்ந்தார் அழகர்; ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சியடித்து கள்ளழகருக்கு தீர்த்தவாரி குளிர்ந்தார் அழகர்; ராமராயர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாலையோர பள்ளத்தில் சிக்கிய சாரங்கபாணி கோவில் தேர் சக்கரம்
எழுத்தின் அளவு:
சாலையோர பள்ளத்தில் சிக்கிய சாரங்கபாணி கோவில் தேர் சக்கரம்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2024
01:04

தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் மூன்றாவது தலமாகவும், ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும், நாலாயிர திவ்வியப் பிரபந்தம் இயற்றப்பட்ட தலமாக போற்றப்படுகிறது.

இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்.15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை சாரங்கபாணி சுவாமி ஸ்ரீதேவி பூமிதேவி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருள தேரோட்டம் வெகுவிமர்சையாக நடந்தது. இதில், சாரங்கா சாரங்கா என்ற பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் அலங்காரத்துடன் 110 அடி உயரமும், 30 அடி விட்டமும், 400 டன் எடை கொண்டது. இந்தத் தேரின் நான்கு சக்கரங்கள் ஒன்பது அடி உயரமும், அதே அளவு விட்டமும் கொண்ட இரும்பினாலான அமைக்கப்பட்டுள்ளது. தேரின் முன்பகுதியிலுள்ள நான்கு குதிரைகள் 22 அடி நீளமும், 5 அடி அகலத்தில், 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்துார் அடுத்ததாக தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர் என கூறப்படுகிறது.  இந்நிலையில், சாரங்கபாணி தெற்கு வீதியில் வரும் போது திடீரென்று சாலையில் தேரின் இடது புற முன் சக்கரம் சுமார் 5 அடி பள்ளத்தில் சிக்கியது. உடனடியாக  தேரோட்டம் பணியாளர்கள் மேலும் தேர் கீழே இறங்காமல் இருப்பதற்கு ஜாக்கிகளை கொண்டும் கிரேன் வரவழைக்கப்பட்டு தேரின் சக்கரத்தை மேலே துாக்கி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், எம்– சாண்ட் கொண்டு பள்ளத்தில் நிரம்பி தேரினை நகர்ந்தும் பணி நடந்து வருகிறது. இதனால் சுமார் 2 மணி நேரமாக தேரோட்டம் தடைப்பட்டு உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar