பதிவு செய்த நாள்
25
ஏப்
2024
12:04
இலங்கை ; ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் வழிகாட்டுதலுடன், இலங்கையில் ராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களை பிரபலப்படுத்த ‘ராமாயண பாதை யாத்திரைத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
ராமாயண பாதை யாத்திரைத் திட்டம் மூலம் இராமாயண காவியத்தில் குறிப்பிடப் பட்டுள்ள இலங்கை முழுவதும் உள்ள ஒன்பது முக்கிய இடங்களை பக்தர்கள் தரிசிக்கலாம். திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சி கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்திர அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவ் கிரி, இலங்கை அதிபரின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க, இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை வழிகாட்டுதலுடன், ரூ.5 கோடியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரையில், ராமயாண தொடர்புடைய தலைமன்னார் ராமர் பாலம், அசோகவனம், காலி ரூமஸ்ஸல, திருக்கோணேஸ்வரம் சிவன் கோயில், புத்தளம் சிவன்கோயில், வெலிமடை திவுரும்பொல, உஸ்ஸன்கொட தேசிய சரணாலயம், இராவணன் குகை, கதிர்காமம் முருகன் கோயில் இடங்களை காணலாம்.