ஸ்ரீசத்ய சாய்பாபாவுக்கு ஆராதனை மஹோத்சவம், சிறப்பு பஜனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2024 02:04
திருப்பூர்; பகவான் ஸ்ரீசத்யசாய்பாபாவின், 13வது ஸித்தி தினம், திருப்பூரில் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. பி.என்., ரோட்டில் உள்ள ஸ்ரீசத்யசாய் பஜனை மண்டபத்தில், ஆராதனை மஹோத்சவம் நடைபெற்றது. அதிகாலை, ஓம்காரம், சுப்ரபாதம், நகர கீர்த்தனம் மற்றும் கணபதி ேஹாமம் நடந்தன. ஸ்ரீசத்யசாய் உருவப் படம் அலங்கரித்து வைத்து வழிபாடு நடந்தது. இதையடுத்து, பிரசாந்தி கொடியேற்றம் நடந்தது. மதியம் நாராயண சேவை என்னும் அன்னதான நிகழ்வு நடந்தது. இதில், திருப்பூர் ஸ்ரீசத்யசாய் சேவா அமைப்பினர் பங்கேற்று நடத்தினர். நேற்று மாலை சிறப்பு பஜன் நிகழ்ச்சியும், பாலவிகாஸ் பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
இறைவனே அன்பின் பிறப்பிடம்; எனவே இறைவனை இதயத்தில் வை. இறைவன் ஒருவனே உண்மையான குரு. அவரை அழைத்தால் அவர் உனக்கு வழி காட்டுவார். அவர் உனக்கு உதவ, உன்னைக் காக்க, உனக்கு வழிகாட்ட, தயாராக உன் இதயத்தில் இருக்கிறார். - பகவான்ஸ்ரீசத்ய சாய்பாபா.