திருப்பூர் ஈஸ்வரன் கோவில் உண்டியலில் ரூ.7.27 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2024 02:04
திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில்களில், வைகாசி விசாக தேர்த்திருவிழா, வரும் மே மாதம் நடைபெற உள்ளது. விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், நேற்று, உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. அறநிலையத்துறை இணை கமிஷனர் செந்தில்குமார் முன்னிலையில், கோவில் பணியாளர்கள் உண்டியலை திறந்தனர். பக்தர்கள் வரிசையாக அமர்ந்து, உண்டியல் காணிக்கை பணத்தை எண்ணினர். மொத்தம், 7 லட்சத்து 27 ஆயிரத்து 661 ரூபாய் மற்றும் 17 கிராம் தங்கம், 32 வெள்ளி பொருட்களும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. சில நாட்களில், வீரராகவ பெருமாள் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு, எண்ணப்பட உள்ளதாக அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.