பதிவு செய்த நாள்
25
ஏப்
2024
04:04
பொன்னேரி:பொன்னேரி, திருவேங்கிடபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற பொன்னியம்மன் கோவிலில், 44வது ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா நேற்று முன்தினம் நடந்தது. பொன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனைகள் நடந்தன. இரவு, பொன்னியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் காட்சியளித்தார். இதில், நுாற்றுகணக்கான பெண்கள் பங்கேற்று, பொன்னியம்மனை நெஞ்சுருக வணங்கி சென்றனர். பொன்னேரி தடப்பெரும்பாக்கம் லட்சுமியம்மன் கோவிலில், பெண்கள் பால்குடம் ஏந்தி வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். இரவு, பல்லக்கு சேவையும், தொடர்ந்து ஊஞ்சல் உற்சவமும் விமரிசையாக நடந்தது. பக்தர்கள் லட்சுமியம்மனை பல்லக்கில் சுமந்து வலம் வந்தனர். அம்மன் கோவில்களுக்கு வந்த பெண்களுக்கு, மஞ்சள் கயிறு, குங்குமம், வளையல் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.