பழநி கோவிலில் நவீன ஆம்புலன்ஸ் வசதி; உபயோகத்திற்கு வந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2024 05:04
பழநி; பழநி கோயிலில் பக்தர்களின் மருத்துவ அவசரத் தேவையை பூர்த்தி செய்ய நவீன ஆம்புலன்ஸ் வசதி உபயோகத்திற்கு வந்தது
பழநி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மலை பாதை, கூட்ட நெரிசலில் செல்லும் போது பக்தர்கள் சிலருக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. இதனை சரி செய்ய முதலுதவி அளிக்க மலைக்கோயில், அடிவாரம் வின்ச் ஸ்டேஷன், படிப்பாதை இடும்பன் கோயில், அருகே மருத்துவமனைகள் உள்ளன. பொதுவாக படிப்பாதை, யானைப்பாதை மூலம் வேகமாக வரும் பக்தர்கள் மலைக்கோயில் வந்தவுடன் மூச்சுத் திணறால் ஏற்படுகிறது. இதில் உடல் நலம் சரியாக உள்ள நபர்கள் பாதிப்பு குறைவாக ஏற்படுகிறது. சக்கரைநோய், ரத்த அழுத்தம், இதய கோளாறுகள் உள்ள நபர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் வயதான நபர்கள் படிப்பாதை, யானை பாதையில் வரும் போது சிரமம் அடைகின்றனர். இதனால் பக்தர்கள் உடல் நல குறைவு ஏற்படுகிறது. உடனடியாக அவசர முதலுதவி சிகிச்சை கோயில் வளாகத்தில் உள்ள முதலுதவி மையங்களில் அளிக்கப்படுகிறது. மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அதிநவீன வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் இதுவரை பழநி கோயிலில் செயல்பட்டில் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இன்று பழநி கோயில் சார்பாக ரூ.26 லட்சம் மதிப்புடைய ஆம்புலன்ஸ் சேவை பக்தர்களின் வசதிக்காக வழங்கப்பட்டது. இதில் அவசர உதவிக்கான 30 வகையான உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பழநி கிரி வீதியில் பொதுமக்கள் வாகனங்கள் அனுமதி இல்லாததால் கிரி வீதியில் பக்தர்களின் பயன்பாட்டுக்காக ரூ.ஏழு லட்சம் மதிப்பில் புதிய பேட்டரி கார் பக்தர்கள் வசதிக்காக உபயதாரர் மூலம் வழங்கப்பட்டது. பாத விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகளுக்கு பின் பக்தர் பயன்பாட்டிற்கு வந்தது கோயில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழுவினர் இதில் கலந்து கொண்டனர்.