Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்னூரில் துறவறம் பூண்ட இருவர்; ... ஐந்து ஆண்டு கடந்தும் அடையாள அட்டை இல்லை; கோவில் பூசாரிகள் கவலை ஐந்து ஆண்டு கடந்தும் அடையாள அட்டை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேதமடைந்து வரும் கண்ணகி கோயில்; தேர்தல் வாக்குறுதி நிறைவேறுமா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சேதமடைந்து வரும் கண்ணகி கோயில்; தேர்தல் வாக்குறுதி நிறைவேறுமா

பதிவு செய்த நாள்

27 ஏப்
2024
02:04

கூடலுார்; வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில் ஒவ்வொரு ஆண்டும் சேதமடைந்து வருவது அதிகரித்துக் கொண்டே உள்ளது. முழுமையாக அழிவதற்குள் தேர்தல் வாக்குறுதி நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடம் அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டம் கூடலுார் அருகே தமிழக கேரள எல்லையான விண்ணேற்றிப் பாறை மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் யாருக்கு சொந்தம் என்பதில் பல ஆண்டுகளாக தமிழக கேரள மாநிலங்களுக்கு இடையே பிரச்னை இருந்து வருகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழக பக்தர்கள் நினைத்த போதெல்லாம் சென்று பொங்கல் வைத்து வழிபட்டதுடன் சிலப்பதிகாரம் முற்றோதலும் செய்திருக்கிறார்கள்.

கெடுபிடிகள்: ஆனால் தற்போது இந்த நிலை மாறி ஆண்டிற்கு ஒரு முறை சித்ரா பவுர்ணமி தினத்தன்று மட்டுமே வழிபட முடியும். அதுவும் கேரள வனத்துறையின் முழு கட்டுப்பாட்டில்தான் கொண்டாட முடியும் என மாறிவிட்டது. தமிழக அதிகாரிகள் கூட்டுக்குழு கூட்டம் நடத்தி விழா கொண்டாடினாலும் கேரள வனத்துறையின் கெடுபிடிகளை மீறி எதுவும் செய்ய முடியவில்லை. ஒரு நாள் மட்டும் நடக்கும் விழாவிற்கு பின் கோயிலை யாரும் கண்டு கொள்வதில்லை. ஒவ்வொரு ஆண்டும் கோயில் சேதமடைந்து வருவது அதிகரித்துள்ளது. கற்கள் பெயர்ந்து கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. கண்ணகி சிலையின் கால் பகுதி மட்டும் உள்ளது. சித்ரா பவுர்ணமி தினத்தன்று சந்தணத்தால் கண்ணகி உருவத்தை செய்து வணங்கி வருகின்றனர். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கோயிலை சீரமைக்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கியும் கேரள தொல்லியல் துறை மற்றும் கேரள வனத்துறையினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் சுற்றுச் சுவர் மட்டும் கட்ட துவங்கி தொடர்ந்து சீரமைப்பு பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

பளியன்குடி பாதை: தமிழக பக்தர்கள் சுதந்திரமாக சென்று வழிபட பளியன்குடி வழியாக தமிழக வனப்பகுதியில் ரோடு அமைப்பதே தீர்வாகும். சமீபத்தில் சர்வே பணிக்காக ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தெல்லுக்குடி பாதையில் சர்வே பணிகள் பெயரளவு நடந்து அதுவும் கிடப்பில் போடப்பட்டது.

வாக்குறுதி: தேனி லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கண்ணகி கோயிலை சீரமைத்து பளியன்குடி வழியாக கண்டிப்பாக பாதை அமைத்துத் தருவேன் என வாக்குறுதியை அள்ளி வீசியுள்ளனர். வெற்றி பெற்றதும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுமா என பக்தர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar