வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2024 07:04
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த தேய்பிறை பஞ்சமி யாக பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
உலக நன்மை வேண்டி நடந்த பூஜையில் முன்னதாக வாராஹி அம்மனுக்கு திரவிய அபிஷேகங்களும், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தேங்காயில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். வளர்பிறை பஞ்சமி யாக பூஜையை வாராஹி அறக்கட்டளை தலைவரும், வரசித்தி வாராஹி அம்மன் திருக்கோயில் பீடாதிபதியுமான சஞ்சீவி சாமிகள் நடத்தி வைத்தார். யாக பூஜையில் வரசித்தி வாராகி அம்பாள் மகாலட்சுமி சொரூபமாக காட்சி தந்தார்.இதில் திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்களுக்கு கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அன்னதான காணிக்கை வழங்கினர். வாராகி அறக்கட்டளை சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.