Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அடைக்கலம் காத்த அய்யனார், பட்டத்து ... பூஜாரிகள் நல சங்கம் சார்பில் ஆலய வழிபாட்டு பயிற்சி துவக்கம் பூஜாரிகள் நல சங்கம் சார்பில் ஆலய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான கோயிலில் சிதிலமடையும் சிலைகள் : கண்டுகொள்ளுமா அறநிலையத்துறை
எழுத்தின் அளவு:
பழமையான கோயிலில் சிதிலமடையும் சிலைகள் : கண்டுகொள்ளுமா அறநிலையத்துறை

பதிவு செய்த நாள்

06 மே
2024
02:05

மேலுார்; திருவாதவூரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில் கோபுரத்தின் சிலைகள் சிதிலமடைவதால் பழமை மாறாமல் பராமரிக்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.

திருவாதவூர் திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் கோயில் கடந்த 2 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோயிலாகும். இக் கோயில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உபகோயிலாகும். கோயிலில் சிவ, கபில, பிரம்ம, வாயு உள்ளிட்ட ஏழு தீர்த்தங்கள் உள்ளது. சிவபெருமான் உமையம்மைக்கு தலச்சிறப்புகளை உணர்த்தும் போது மதுரையம்பதியும், வாதபுரியும் தன் இரு கண்களுக்கு ஒப்பானவை என்று உரைத்தார். மேலும் மகாசேனபாண்டியன் திருமறைநாதருக்கு சாற்றிய கொன்றை மாலை மதுரையம்பதியின் சொக்கலிக்கப் பெருமானிடத்தில் இருப்பதை காட்டி இவ்விரு தலங்களிலும் தான் ஒரே மூர்த்தியாக விளங்குவதை பாண்டியனுக்கு உணர்த்தினார். மதுரையம்பதி சுந்தரேஸ்வர பெருமானே இங்கு திருமறைநாதராகவும், அன்னை மீனாட்சியே வேதநாயகி அம்பாளாக எழுந்தருளியுள்ளனர். மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் முடமான சனிபகவான் சாபநீக்கம் பெற்றதும், கபிலமுனிவரின் வீரகத்தி தோஷம் நிவர்த்தியானதும், பிருகுமுனிவரின் சாபத்தால் தனது தன்மை குன்றிய அக்னிதேவன் முந்தைய நிலைமையை பெற்றதும் இங்குதான் என்பது வரலாறு. முக்கியத்துவம் வாய்ந்த தலம் பராமரிப்பில்லாமல் உள்ளது.

பக்தர் சதீஷ் கூறியதாவது : தொன்மையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் திருமறைநாதர் மற்றும் வேதநாயகி அம்பாள் கருவறைக்கு மேல் உள்ள கோபுரத்தில் வரலாற்றுகளை விளக்கும் சிலைகள் சிதிலமடைந்து கம்பிகள் துருப்பிடித்து வெளியே தெரிகிறது. தவிர கோயில் வளாகத்தில் உள்ள சுவாமி கருவறை சுவர்கள் மற்றும் வெளிப்புற சுவர்களின் பூச்சுகள் பெயர்ந்துவிட்டது. அதனால் அறநிலையத்துறையினர் நிதி ஒதுக்கி பழமை மாறாமல் கோயிலை பராமரிக்க வேண்டும் என்றார். கோயில் நிர்வாகிகள் கூறுகையில், " சிலைகள் சிதிலமடைந்தது குறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்படும்" என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar