அடைக்கலம் காத்த அய்யனார், பட்டத்து அரசி அம்மன் கோயில் புரவி எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2024 02:05
கொட்டாம்பட்டி; பள்ளபட்டி அடைக்கலம் காத்த அய்யனார், செல்லாண்டி, பட்டத்து அரசி அம்மன் கோயில் புரவி எடுப்பு திருவிழா (மே 5) துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் வெள்ளமலை பட்டியில் இருந்து பக்தர்கள் இரண்டு கி.மீ., தொலைவில் உள்ள பள்ளபட்டி மந்தைக்கு புரவிகளை கொண்டு வந்தனர். இன்று (மே 6) மந்தையில் இருந்து 5 கி.மீ., தொலைவில் உள்ள மூன்று கோயிலுக்கு புரவிகளை கொண்டு சென்றனர். இத் திருவிழாவில் பள்ளபட்டி, கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.