பதிவு செய்த நாள்
13
மே
2024
01:05
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், ராமானுஜர் ஜெயந்தி வைபவம் நடந்தது.
ராமானுஜ ஜெயந்தி வைபவம், வைணவ திருத்தலங்களில் சிறப்பாக கொண்டாடப்படும். காரமடை அரங்கநாதர் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி வைபவம் நடந்தது. அதிகாலை மூலவர் அரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம், கால சந்தி பூஜை செய்யப்பட்டது. பின்பு ராமானுஜர் சன்னதியில் விஸ்வக்சேனர் பூஜை, புண்ணிய வசனம், கலச ஆவாஹனம் செய்யப்பட்டது. பின்பு மூலவர் ராமானுஜர் மற்றும் உற்சவருக்கு நெய், தேன், பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடந்தது. அப்போது நாராயண சுக்தம், ஸ்ரீ சுத்தம் நீராட்டம் உள்ளிட்டவை சேவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரங்க மண்டபத்தில் அரங்கநாதர் முன், ராமானுஜர் எழுந்தருளினார். அவருக்கு சடாரி மரியாதை அளிக்கப்பட்டது. பின்பு வெண்பட்டு குடை, மேள தாளங்கள் முழங்க, கோவிலில் வலம் வந்து சன்னதியை அடைந்தார். பின்பு உச்ச கால பூஜை, சற்று முறை சேவித்த பின், தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த வைபவத்தில் கோவில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், அறங்காவலர் குழுவினர், கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.