அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் 150 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் முறிந்து தெப்பக்குளத்தில் விழுந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2024 04:05
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தின் அருகில் இருந்த 150 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் வேருடன் முறிந்து தெப்பக்குளத்தில் விழுந்தது.
அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் கூடிய பலத்த சூரக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் நகரில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தும் கிளைகள் உடைந்தும் சேதமடைந்தது. இதன் காரணமாக நகரில் நேற்று இரவு முதல் இன்று நண்பகல் வரை பல இடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டது. இந்நிலையில் அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தின் மேல் தெற்கு பகுதியில் இருந்த 150 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் முற்றிலுமாக முறிந்து தெப்பக்குளத்தில் விழுந்தது. தகவல் அறிந்த அறங்காவலர் குழுவினர், செயல் அலுவலர் உள்ளிட்டோர் ஊழியர்கள் மூலம் தெப்பக்குளத்தில் விழுந்த மரத்தை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.