திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2024 04:05
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் அமைந்துள்ளது தங்காதலி அம்மன் உடனாய வாசீஸ்வரசுவாமி கோவில். திருத்தணி முருகன் கோவிலின் உபகோயிலான இங்கு வைகாசி விசாக பெருவிழா நேற்று காலை 9:30 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சுவாமி திருவீதி உலாவும் மாலையில் சுவாமி ரிஷப வாகனத்தில் திருவீதி உலாவும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் 18 ம் தேதி தேதி மாலை நடக்கிறது. 22ம் தேதி வைகாசி விசாகப் பெருவிழாவும் 23ம் தேதி பூப்பல்லக்கு திருவிழாவும் நடக்கிறது. வரும் 25ம் தேதி காலை விழா நிறைவு பெறுகிறது.