பதிவு செய்த நாள்
14
மே
2024
04:05
ஊத்துக்கோட்டை;
பெரியபாளையம் அருகே, பெருமுடிவாக்கம் கிராமத்தில் உள்ளது ஸ்ரீகோதண்டராம
சுவாமி கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் ஒவ் வொரு ஆண்டும், சித்திரை
மாதம், 10 நாள் பிரம் மோற்சவ விழாநடைபெறு வது வழக்கம். தினமும் காலை,
மாலை உற்சவர் சிறப்பு அலங்கா ரத்தில் திருவீதி உலா வந்து அருள்பாலிப்பார்.
நேற்று காலை, 6:30 மணிக்கு விழா கொடியேற் றத்துடன் துவங்கியது. காலை, 8:00
மணிக்கு துவஜாரோஹணம், இரவு, 7:30 மணிக்கு உற்சவர் யாளி வாகனத்தில் திரு
வீதி உலா வந்து அருள் பாலித்தார். இரண்டாம் நாளான இன்று காலை, 8:00 மணிக்கு
ஹம்ச வாகனத்தி லும், இரவு, 7:30 மணிக்கு சிம்ம வாகனத்தில் திருவீதி உலா
வந்து காட்சியளிக்கி றார். தொடர்ந்து 10 நாட் கள் விழா நடக்கிறது.
ஆர்.கே.பேட்டை
சுந்தரராஜ பெருமாள் கோவில் சித்திரை பிரம் மோற்சவம்கொடியேற்றத்து டன்
துவங்கி நடந்து வரு கிறது. இதில், அம்ச வாகனம், சிம்ம வாகனம், கஜ வாக னம்,
சந்திர சூரிய பிரபை, கருட வாகனம் என தினசரி பல்வேறு வாகனங்களில் பெருமாள்
வீதியுலா எழுந் தருளி வருகிறார். முக்கிய விழாவான தேர் திருவிழா நேற்று
காலை நடந்தது. திரளான பக்தர் கள், கோவிந்தா கோஷம் முழங்க தேரை வடம்
பிடித்து இழுத்தனர்.காலை 11:00 மணியள வில், பஜார் வீதியில் நிலை கொண்ட
தேர், மாலை 3:00 மணிக்கு மீண்டும் புறப்பட்டது. திருத்தணி சாலை, அஞ்சலக
வீதி வழியாக மாலை 6:00 மணிக்கு மீண் டும் கோவில் நிலைக்கு வந்தடைந்தது.
இதில்,. திரளான பக்தர்கள் பங் கேற்றனர். விழாவில் சுற்றுப்பகுதியை சேர்ந்த
பக்தர்கள் செய்தனர். இன்று 14ம் தேதி காலை சக்கர ஸ்தானம் நடைபெறும். மாலை
6:00 மணிக்கு, குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளுகிறார்.