ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகாசி வசந்த உற்ஸவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2024 10:05
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வைகாசி மாத கோடை வசந்த உற்ஸவம் நேற்று முதல் துவங்கியது.
இதனை முன்னிட்டு நேற்று மாலை 5:30 மணிக்கு வெள்ளிக்குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சந்தன காப்பு சாற்றப்பட்டும், புஷ்ப ஆடை அணிவித்தும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் மாடவீதிகள் வழியாக நாடகசாலை தெரு திருவேங்கடமுடையான் கோயில் தெப்பத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர். அங்கு ஆண்டாள் கோதாஸ்துதி பாசுரத்தை வேதபிரான் சுதர்சன் பாடினார். பின்னர் ஆண்டாள், ரெங்கமன்னார் சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மே 23 வரை பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் திருவேங்கடமுடையான் சன்னதியில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருள்கின்றனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா தலைமையில் கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்துள்ளனர்.