காரைக்குடி; காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயில் செவ்வாய் திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது.
காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயில் செவ்வாய் திருவிழா கடந்த மே 7 ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தினமும் காலை 9 மணிக்கு வெள்ளிக்கேடயதில் அம்பாள் புறப்பாடும் பக்தி உலாவும் இரவு தீபாராதனை பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை 6.45 மணிக்கு நடந்தது. முன்னதாக, பெண்கள் முளைப்பாரி, மதுக்குடம் எடுத்து தேரைச் சுற்றி வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து தேர் சங்கராபுரம் காட்டம்மன் கோவிலுக்கு சென்றது. வழிநெடுகிலும் பெண்கள் வண்ண கோலமிட்டு அம்மனை வரவேற்றனர். இன்று காலை அம்மன் கோயிலுக்கு திரும்புதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை காலை யானை வாகனத்தில் அம்பாள் வீதியுலாவும், இரவு 11 மணிக்க தெப்பத் திருவிழாவும், அதிகாலை புஷ்ப பல்லாக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.