குருபகவான் கோயிலில் வாகன பிறை கட்டுமான பணி துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06நவ 2012 10:11
புளியரை: புளியரை குருபகவான் கோயிலில் வாகன பிறை கட்டுமான பணி நடக்கிறது. செங்கோட்டை அருகே உள்ள புளியரையில் சுயம்புலிங்க சதாசிவ மூர்த்தி குரு பகவானாக அருள்பாலிக்கும் சிவகாமி அம்பாள் சமேத சதாசிவமூர்த்தி கோயில் உள்ளது. இந்த கோயிலில் விழாக்காலங்களில் சுவாமி அம்பாள் வீதி உலா வருதல் நடைபெறும். அவ்வாறு செல்லும் போது பூங்கோயில் வாகனம், சின்ன ரிஷப வாகனம், பெரிய ரிஷப வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், பூம்பல்லக்கு வாகனம் ஆகிய வாகனங்களில் வீதி உலா நடக்கும். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று இந்து அறநிலைதுறையின் சார்பாக 4 லட்சம் ரூபாய் செலவில் வாகனப் பிறை கட்டுமான பணி நடந்து வருகிறது. வாகன கட்டுமாண பணியில் மேல் கீழ் பகுதி என இரண்டு அடுக்காக கட்டப்பட்டு வருகிறது. கோயில் பகுதியில் வாகனப் பிறை இல்லாத காரணத்தால் சுவாமி அம்பாள் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பாதுகாத்து வந்தனர். தற்போது கோயில் அருகே வாகனப்பிறை கட்டப்படுவதால் கோயில் அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருத்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.