பதிவு செய்த நாள்
07
நவ
2012
10:11
ராசிபுரம்: அத்திபலகனூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். ராசிபுரம் அடுத்த அத்திபலகனூரில், மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் அக்னி சட்டி எடுத்து அம்மனுக்கு வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து, கோவில் பூசாரி ராஜாவிடம் ஏராளமான குழந்தைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் வரிசையில் நின்று சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சாட்டையடி வாங்கினால், தீராத நோய்கள் தீரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், பில்லி, சூனியம் போன்றவை விலகும் என்பது ஐதீகம். நவ., 7 காலை, 7 மணிக்கு பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். மாலை, 5 மணிக்கு அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். நாளை (நவ., 8) உடற்கூறு வண்டி வேடிக்கை, எருது ஆட்டம் நடக்கிறது. 9ம் தேதி கம்பம் பிடிங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.