பெரம்பலூர் முத்துமாரியம்மன் கோயிலில் முகூர்த்த கால் நடும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2024 10:05
பெரம்பலூர்; பெரம்பலூர், சங்கு பேட்டை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பூச்சொரிதலுக்கான முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
சங்கு ங்குபேட்டையிலுள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா பூச்சொரிதலையொட்டி விழா பந்தலுக்கான கால்கொள் (முகூர்த்த கால் நடும்) நிகழ்ச்சி நேற்று காலை 8 மணிக்கு வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வையொட்டி முற்பகல் 11 மணிக்கு மூலவருக்கு அபிஷேகமும், பிற்பகல் 1.00 மணிக்கு உச்சிகால பூஜையும் நடைபெற்றது. இந்நிகழ்வில் சங்குபேட்டை பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துமாரிஅம்மனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் நகர் 19, மற்றும் 20-வது வார்டு பொதுமக்கள், கிராம காரியஸ்தர்கள், பூசாரிகள், அடங்கிய விழா குழுவினர் செய்து வருகின்றனர்.