பதிவு செய்த நாள்
20
மே
2024
10:05
பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள சக்தி மாரியம்மன் திருக்கோவிலில் பொங்கல் திருவிழா துவங்கியது.
கடந்த ஏழாம் தேதி பூச்சாட்டு விழாவும், 12ம் தேதி முனிசாட்டு விழாவும் நடந்தது. 14ம் தேதி கணபதி ஹோமம், காப்புக் கட்டுதல், அலங்கார பூஜை, கம்பம் நடுவிழா நடந்தது. வரும், 21ம் தேதி படைக்கலம், திரு ஆபரணம் எடுத்து வருதல், குதிரையின் மேல் அம்மன் அழைத்தல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. மறுநாள் காலை, 5:00 மணிக்கு சக்தி கரகம், 10:00 மணிக்கு பொங்கல், மாவிளக்கு, மாலை, 4:00 மணிக்கு செல்லுகுத்தி ஆடுதல், அக்னி கரகம் எடுத்து வருதல் விழா நடக்கிறது. 23ம் தேதி காலை, 9:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, இரவு அலங்கார பூஜை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. 28ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சக்தி மாரியம்மன் திருக்கோயில் நிர்வாக கமிட்டி செய்துள்ளது.