பதிவு செய்த நாள்
20
மே
2024
04:05
பல்லடம்; பல்லடம் அருகே, அல்லாளபாரம் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோவிலில், ஒன்பதாம் ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது.
முன்னதாக, காலை, 5.00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. காலை, 9.00 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவமூர்த்திக்கு, பால், இளநீர், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, திருமஞ்சனம் மற்றும் உலக நலன் வேண்டி ஸ்ரீசுதர்சன ஹோமம் நடந்தது. பூஜிக்கப்பட்ட தீர்த்த கலசங்களால் மூலவருக்கு அபிஷேகமும் இதையடுத்து அலங்காரமும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருள, ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மூலவர் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.