சென்னை; மயிலாப்பூரில் உள்ள வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெரு விழாவை முன்னிட்டு தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
மயிலாப்பூரில் உள்ள வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெரு விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (20ம்தேி) காலை 7 மணிக்கு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரில் வெள்ளீஸ்வரர் மற்றும் காமாட்சி அம்மன் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.