திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2024 04:05
மேலுார்; திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று திருக்கல்யாணம் நடைபெற்றது. அதற்கு முன்பாக திருமறைநாதர், பிரியாவிடை மற்றும் வேதநாயகி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமத்துடன் பிரசாதம் வழங்கப்பட்டது. சுவாமிக்கு திருக்கல்யாணம் முடிந்ததும் பெண்கள் புதிய மஞ்சள் கயிற்றில் தாலி அணிந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண விருந்து நடைபெற்றது. இவ்விழாவில் மேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் கலந்து கொண்டனர். நாளை தேரோட்டம் நடைபெறும். மே 22ம் தேதி கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.