பதிவு செய்த நாள்
21
மே
2024
02:05
திருவொற்றியூர், திருவொற்றியூர், கால டிப்பேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பழமையான இக்கோவி லில், ராஜகோபுர பணிகள் காரணமாக, 2007ம் ஆண்டு முதல் எந்த திருவிழாக்களும் நடைபெறவில்லை. இந்த நிலையில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் திருப்பணிகள் முடிந்து, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அதைத்தொ டர்ந்து உற்சவங்கள், திருவிழாக்கள், சுவாமி புறப்பாடு உள்ளிட்டவை நடந்து வருகின்றன. அந்த வரிசையில், வைகாசி பிரம்மோற் திருவிழா, நேற்று அதிகாலை கொடியேற் றத்துடன் துவங்கியது. 17 ஆண்டுகளுக்கு பின் கொடியேற்றம் நடைபெறுவதால், ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். அதன்படி, ஸ்ரீதேவி - பூதேவி உற்சவர் பவள வண்ண பெருமாளுக்கு, ஹைதராபாதில் இருந்து வரவழைக்கப்பட்ட, 2,000 மனோரஞ்சிதம் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பத்து நாள் பிரம்மோற்சவ திருவிழாவில், முக்கிய நிகழ்வான கருடசேவை 22ம் தேதியும், திருத்தேர் உற்சவம் 26ம் தேதியும் நடக்கிறது. தொடர்ந்து, 30ம் தேதி புஷ்ப பல்லக்கு 17 ஆண்டுகள் கழித்து நடைபெறும், பிரம்மோற்சவம் என்பதால், திருவொற்றியூர் சென்னை சுற்று வட்டாற பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.