மேலுார்; திருவாதவூரில் திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் கோயில் வைகாசி திருவிழா மே 13 வாஸ்து சாந்தியுடன் துவங்கியது. மே 17 ல் பஞ்சமூர்த்திகளுடன் திருமறை நாதர், வேதநாயகி அம்பாள் மேலுார் மாங்கொட்டை நாதர திருவிழாவுக்கு எழுந்தருளினார். மே 20 ல் திருக்கல்யாணம் நடந்தது. இன்று திருமறைநாதர். வேதநாயகி அம்பாள் மற்றும் பிரியாவிடையுடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பூஞ்சுத்தி, கட்டையம்பட்டி, 18 ங்குடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாளை (மே 22 )கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.