தங்க காக்கை வாகனத்தில் திருநள்ளார் சனீஸ்வர பகவான் வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2024 03:05
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தங்க காக்கை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர கோவிலில் தனிச்சன்னதியில் அனுக்கிரகமூர்த்தியாக சனீஸ்வர பகவான் அருள்பலித்து வருகிறார். இக்கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.கடந்த 12ம் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு, கடந்த 14ம் தியாகராஜர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளல் நடைபெற்றது. பின்னர் பஞ்சமூர்த்திகள் சகோபுர தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் கடந்த19ம் தேதி நடைபெற்றது.நேற்று ஸ்ரீசனிபகவான் தங்ககாக்கை வாகனத்தில் வீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீ மத்சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.