54 ஆண்டுகளுக்குப் பிறகு திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் நடைபெற்ற தெப்ப உற்சவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2024 07:05
திண்டுக்கல் அபிராமி உடனுறை பத்மகிரீஸ்வரர் மற்றும் ஞானாம்பிகை உடனுறை காளகஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் தெப்ப உற்சவ விழா நடைபெற்றது. விழாவில் நேற்று (22ம் தேதி) வைகாசி விசாகத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரில் மையப்பகுதியில் உள்ள அபிராமி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திண்டுக்கல் வரலாற்று சிறப்புமிக்க மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கோட்டை கேணியில் 54 வருடங்களுக்கு பிறகு இங்கு தெப்ப திருவிழா நடைபெறுகிறது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் உற்சவங்கள் சிறப்பாக கோயில் தலைமை குருக்கள் அலங்காரம் செய்து மலர் மாலைகள் சூட்டி தெப்பத்தில் ரத உற்சவம் நடைபெற்றது. மலையடிவார தெப்பத்தின் இருபுறமும் எதிர் எதிராக பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தெப்பத்தில் அமைக்கப்பட்ட தேரானது மின்னொளியில்யில் அசைந்து சென்றது காண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. திண்டுக்கல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர். தெப்பத் திருவிழா தொடங்கியது முதல் மழை பெய்ய தொடங்கியது மழையையும் பொறுப்பெடுத்தாமல் பக்தர்கள் மழையில் நனனைந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.