பதிவு செய்த நாள்
07
நவ
2012
10:11
விக்கிரமசிங்கபுரம்: பாபநாசம் அகஸ்தியர் அருவி கல்யாணதீர்த்தம் கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் ஆகம முறைப்படி பூஜைகள் நடத்த வேண்டுமென்று அம்பை., எம்எல்ஏ., சுப்பையா கோயில் நிர்வாகிகளிடம் வலியுறுத்தினார்.இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கல்யாணதீர்த்தம் உலகநாயகி சமேத கோடிலிங்கேஸ்வரர் கோயில், பாபநாசம் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் பாபநாசம் கோயில் நிர்வாகத்தை சேர்ந்த அர்ச்சகர் கோயிலுக்கு சென்று தினமும் பூஜை செய்ய வேண்டும். நிர்வாகத்தின் தரப்பில் இருந்து எந்தவித அர்ச்சகரும் கோயிலுக்கு சென்று நித்திய பூஜை செய்யவில்லை என்ற தகவல் அம்பை., எம்.எல்.ஏ., சுப்பையாவிற்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் நேற்று அகஸ்தியர் கோயில் அருகில் கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடேஷ்வரனிடம் கல்யாணதீர்த்தம் கோயிலில் நடக்கும் பூஜைகள் குறித்து எம்எல்ஏ., சுப்பையா விபரம் கேட்டறிந்தார்.அப்போது பாபநாசம் கோயில் கணக்கர் முருகன், அதிமுக ஒன்றிய செயலாளர் தாயப்பராஜா, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவி மனோன்மணி மற்றும் இசக்கிமுத்து, மணிமுத்தாறு டவுன் பஞ்., தலைவர் சிவன்பாபு, நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் டேவிட் டேனியல், பாபநாசம் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் கோயிலில் நித்திய பூஜை தினமும் நடக்க வேண்டுமென்று நிர்வாக அதிகாரியிடம் எம்எல்ஏ., சுப்பையா வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து கோயிலில் நித்திய பூஜை முறைப்படி நடத்துவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதாக கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடேஷ்வரன் உறுதியளித்தார்.