ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்கமடை கோட்டை முனீஸ்வரர், கருப்பணசுவாமி, காளியம்மன் கோயில் 46 ம் ஆண்டு வைகாசி விழா, மே 16 இல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் மூலவர்களுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. விழாவின் தொடர்ச்சியாக மே 17 ல் திருவிளக்கு பூஜை நடைபெற்றன. இந்த நிலையில், முக்கிய விழாவான பூக்குழி விழா நேற்று நடைபெற்றது. விரதம் இருந்த பக்தர்கள் ஊர்வலமாக சென்று கோயிலின் முன்பு தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். பின்பு மூலவர்களுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.